விமல் வீரவன்ச இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அப்துல்லா குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள், நாட்டில் மீண்டும் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்தும் வகையிலேயே செயற்பட்டு வருகிறார்கள் என்றும் முஸ்லிம்கள் எப்போதும் பயங்கரவாதத்துக்கு எதிரானவர்களே என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவாதத்தின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த நாட்டில் வாழும் பௌத்தர்களையோ, இந்துக்களையோ, கிறிஸ்தவர்களையோ தாக்குவதற்கு முஸ்லிம்கள் ஒருபோதும் எண்ணவில்லை.

கடந்த 12ஆம் திகதி வரையில் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு கூறப்பட்டது. இந்த காலப்பகுதியில் விமல் வீரவன்ச இங்கு கூறும் விடயங்களை ஏன் அவர் ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை.

எம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நீதித்துறைக்கு முன்பாக கொண்டு வாருங்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை பெற்றுத் தாருங்கள். அதைவிடுத்து இனக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம்” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்