கோட்டாவிற்கு வௌிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதிக் காலம் 6 வாரங்களுக்கு நீடிப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் மருத்துவ தேவைக்காக வௌிநாடு செல்ல வழங்கப்பட்டிருந்த காலத்தை நீடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்துள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது இருதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு ஆறு வார ஓய்வு காலம் தேவைப்படுகிறது என நீதிமனரில் சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் பிரகாரம் அவருக்கு முன்னர் வழங்கப்பட்ட மே மாதம் 31 வரையான கால நீடிப்பை எதிர்வரும் ஜூலை 24ம் திகதி வரை 6 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாய் அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டா உட்பட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்