வீதியை புனரமைக்க கோரிக்கை

திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பலகாம கோயிலிக்கு முன்னால் செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்கள்.

தாயிப் நகரயையும் தம்பலகாம கோயில் பிரதான கொழும்பு வீதியை இணைக்கும் இவ் வீதி பல வருட காலமாக சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்து செய்வதில் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதுடன் போக்குவரத்தின் போது பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், அரச ஊழியர்கள் என பலர் இவ்வீதியூடாக நாளந்தம் பயணம் செய்து வருகிறார்கள்

வைத்தியசாலை தேவை நிமித்தம் கூட இவ்வீதியூடாகவே பயணம் செய்ய வேண்டியுள்ளதுடன் குறித்த வீதியில் மின்சார வசதியுடனான வீதி மின் விளக்குகள் எதுவும் இன்மை இருள் சூழ்ந்த பிரதேசமாக காட்சி தருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் அதிக தூரத்தை கொண்ட இவ்வீதியை செப்பணிட்டுத் தருமாறு மக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்கள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்