பத்திரிக்கை அறிக்கையும் பாராளுமன்ற அறிக்கையும்தான் தமிழ் தலைமைகளின் செயற்பாடு. கிழக்கு தமிழர் ஒன்றியம் குற்றச்சாட்டு

பத்திரிக்கை அறிக்கையும் பாராளுமன்ற அறிக்கையும்தான் தமிழ் தமிழ் தலைமைகளின் செயற்பாடு. பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வக்கற்ற வங்குரோத்து அரசியலில் செய்து ஐக்கிய தேசிய கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கூட்டமைப்பிற்கு கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை  இயலாதகாரியமா? என கிழக்கு தமிழர் ஒன்றியம் கேள்வியெழுப்பியுள்ளது.

கல்முனை நகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இக் கருத்தினை முன்வைத்தனர்.
வெறுமனே பத்திரிக்கை அறிக்கையும் பாராளுமன்ற உரையையுமே பேசிக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு காலத்தை கடத்துகின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்  இரா. சம்பந்தன் அவர்கள் கடந்த தேர்தல் காலத்தில் கல்முனை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை வேளையில் ஒருவாரத்திற்குள் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக வாக்குறுதியழித்தார் ஆனால் இன்றுவரை நிறைவேற்றிவைக்கவும் இல்லை என குற்றம்சாடினர்.
நல்லிணக்கம் பற்றி பேசும் கூட்டமைப்பு கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயத்த காட்டாத நல்லிணக்கமா இனியும் வெளிப்படுத்த போகின்றீர்கள்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களது இனத்திற்கு இன்னல் ஏற்பட போகின்றது என அறிந்து தமது பதவிகளை துச்சமென எண்ணி  கட்சி பேதங்களை கடந்து  செயற்பட்டதை போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை துறந்து இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பார்களாயின் தமிழ் மக்கள் அழித்த வாக்கிற்கு நன்றியுள்ளதாக இருப்பார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையை தவிர்த்து கல்முனை மக்களோடு இணைந்து போராட்டங்களில்  ஈடுபட்டு பிரதேச செயலகம் வெற்றிபெற துணை நிற்க வேண்டும்.  2009ம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை  இந்தியாவில் போய் மருத்துவ அறிக்கையை வெளியிட்டது போல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு காலத்தை கடத்தக்கூடாது என வலியுறுத்தினர்.
நாங்கள் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் மதத்தலைவர்கள் கல்முனை அரசியல் தலைகளுடன்  பக்கபலமாக கைகோர்ப்போம் என வலியுறுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்