2 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோய்னுடன் ஒருவர் கைது!

கட்டுபெத்த பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று(புதன்கிழமை) காலை குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

காரொன்றில் குறித்த ஹெரோய்ன் போதைப்பொருளைக் கொண்டுச் செல்வதற்கு முயன்ற வேளையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து ரூ. 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்