ஜனநாயக விழுமியங்களை கேள்விக்குறியாக்கும் நிலைப்பாடுகள் வலுப்பெறுவதை அனுமதியாதீர்!

ஜனநாயக விழுமியங்களை கேள்விக்குறியாக்கும்
நிலைப்பாடுகள் வலுப்பெறுவதை அனுமதியாதீர்!

கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர்அஹமட் வலியுறுத்து

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பேரினவாத நடைமுறைகள் உண்;ணாநோன்பு இருப்பதன் மூலமாக எதனையும்
சாதித்துவிடலாம் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவருகின்றன. இவை ஏனைய சமூகங் களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் நிலைகுலையைச் செய்யும் சூழ்நிலைகளைத் தோற்றிவித்து வருகின்றன. அத்தோடு இத்தகைய செயற்பாட்டை ஊக்குவிக்கும் நிலைப்பாட்டோடு சில பௌத்த மதத்தலைவர்கள் கருத்துகளை முன்வைத்து வருவதும் கவலையளிக்கிறது. முன்னெப்போதும் இல்லாதளவு இன்று வடக்குரூபவ்கிழக்கில் பேரினவாத செயற்பாடுகள் கொடிகட்டிப்பறக்க ஆரம்பித்திருக்கின் றன.

இதன் அறுவடைகள் ஜனநாயக விழுமியங்களை கேள்விக்குறியாக்கும் நிலைக்கே இட்டுச்செல்லும் எனவே இவை வலுப்பெறுவதை எவரும் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு தெரிவிக்கிறார் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட்.

இதுகுறித்து அவர்மேலும் தெரிவித்திருப்பதாவது:-

நாட்டில் அரசியல் உறுதிப்பாடற்ற நிலைமை காணப்படுகின்றது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அதிகாரப்
போட்டியால் எவரின் சொல்லைக் கேட்பது என்ற நிலையில் அரச நிர்வாகமும் அதிகாரிகளும் உள்ளனர். இந்த அதிகாரப்
போட்டியால் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளைரூபவ் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் உறுதிப்பாடற்ற நிலைக்கு உடன் தீர்வுகாண வேண்டுமெனில் தேர்தல்
ஒன்றுக்குச்செல்வதே ஒரேவழி. இதை நான் தொடர் ந்து வலியுறுத்தி வருகின்றேன்.

நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் மைத்திரிபால சிறிசேனவே இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த உறுதிப்பாடற்ற
அரசியல் நிலைக்குத் தீர்வுகாண முன்வரவேண்டும். இதனையே பிரதான எதிர்கட்சியில் உள்ள பங்காளிக்;கட்சிகளின்
தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக இனங்களுக்கிடையில் இனமுறுகலைத் தோற்றிவிக்க முற்படும் சக்திகளை எந்த இனமாகரூபவ் மதமாக அரசியல் தரப்பாக இருந்தா லும்; பாராபட்சமின்றி கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாராதூரமான முன்னுதாரணங்களின் களமாக மாறிவரும் பேரினவாதச் செயற்பாடுகள் அரசியல்களத்தில் ஜனநாயகத்தை
புறம்தள்ளி செயற்படும் நிலைமைக்கு வித்திட்டுவருகின்றன. இந்தநிலை தொடருமானால் சிறுபான்மை சமூகங்களின்
அரசியல் செயற்பர்டுகளும் கேள்விக்குரியனவாகவே மாறிவிடும்.நாளுக்கு நாள் நாடு இக்கட்டான நிலைக்குச்
சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலைமையை மாற்றி அமைத்து நாட்டைக் கட்டியெழுப்ப – ஜனநாயகத்தைப் பாதுகாக்க அரச
தலைமைகளுடன் பொதுமக்கள் உட்பட அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.

சிறுபான்மை மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் நாளாந்தம் ரூபவ் பேரினவாதிகள் முன் வைக்கும்
கருத்துகள் நாட்டின் எதிர்காலத்துக்கு நன்மை அளிப்பனவாக தெரியவில்லை. இவை நாட்டில் வன்முறைகளை தூண்டி பேதங்களை உருவாக்கும் வழிகாட்டிகளாகவே தெரிகின்றன.எனவே தற்போதைய அரசியல் நிலையில் நாட்டுமக்களின கருத்துகளை அறிந்து அதன்படி வழிமுறைகளை செம்மைப்படுத்து வதே சிறப்பானதாகும். எனவே பொதுத்தேர்தலை நடத்த அரச தலைமைகள் ஒன்றிணைந்து முன்வருவதே அவசியமானது – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்