வவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகிகள் தினம்!

ஈழமக்கள் புரட்சிகர முன்னனியின்(EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் போராளிகளின் 29வது தியாகிகள் தினம் வவுனியா வெளிவட்ட வீதியில் உள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று காலை (19.06.2019) 10.00 மணியளவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மறைந்த தோழர் பத்மநாபா மற்றும் போராளிகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் ரேகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் அருந்தவராஜா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் , மேலும் அக்கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, ஆகியோருடன் ஈழவர் புரட்சி அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஜெகன் உட்பட அக்கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்