கிழக்கில் பாரிய நிர்வாக முடக்கம் ஏற்படுத்தப்படும் – வியாழேந்திரன் எச்சரிக்கை

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவை அரசாங்கம் தரமுயர்த்தாவிட்டால், கிழக்கு மாகாணத்தில் பாரிய நிர்வாக முடக்கம் ஏற்படுத்தப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினரை சென்று பார்வையிட்டதையடுத்து நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்கள் கொண்ட அத்திவாரத்திலேயே அரசாங்கம் நின்றுகொண்டிருக்கின்றது.

இந்நிலையிலே, இன்று போராட்டத்திலே ஈடுபட்டிருக்கும் 5 பேரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தாமல் அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்தி உண்ணாவிர போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர  வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் கிழக்கு மாகாணத்தில் நாம் பாரியளவிலான நிர்வாக முடக்கங்களை செய்வோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்