புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு நவீன உபகரணம்

புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு, குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் உயர் தொழில் நுட்ப கருவி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனை வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் சுமித் திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
புத்தளம் ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் நீலிகா திஸாநாயக்கவின் வேண்டுகோளின் அடிப்படையில் 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த உபகரணத்தை கொழும்பு மேற்கு பிரிவின் இனவீல்  கழகம் ( Inner Wheel Club Colombo West)வழங்கியுள்ளது.
“மெடிகல் எய்ட் டூ ஸ்ரீலங்கா இன் யூகே” நிறுவனத்தின் தலைவி வைத்தியர் நளினி ரணசிங்கவின் வழிகாட்டலில் இந்த உபகரணம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த உபகரண கையளிப்பு நிகழ்வில் கொழும்பு மேற்கு பிரிவின் இனவீல் கழகத்தின் தலைவி சாந்த ஜயலத் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்