கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு நடை பயணம்

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் இன்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.

கரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு பயணம், கிளிநொச்சி மருதநகர் பகுதியில் ஆரம்பமாகி ஏ-9 வீதி ஊடாக மாவட்ட செயலகம் வரை சென்றதுடன் அங்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.

கிராமங்களில் பயன்படுத்தப்படும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தக் கோரியும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரத்தினை கட்டுப்படுத்தக் கோரியும் குறித்த விழிப்புணர்வு பயணம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடை பயணத்தில் போதைப் பொருளுக்கு எதிராகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலுமான பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் நடை பயணத்தில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்