வடக்கு கிழக்கில் உள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் குறித்து மனித உரிமை ஆணைக்குழு ஆராய்வு

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னரான பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

உப காரியாலயத்தின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில், மன்னாரில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் முப்படையிரின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர், மன்னார் பகுதிகளில் இடம்பெற்றுவரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் முஸ்லிம் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக காணப்படுவதாகவும் அதிகளவிலான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் அநாகரிகமான முறையில் நடத்தப்படுவதாக கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர், குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடனும் இராணுவம் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்