பல்லாயிரக்கணக்கான மக்கள் சுடரேற்றி போராட்டத்திற்கு வலுச்சேர்த்தனர்

பல்லாயிரக்கணக்கான மக்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வரும்  கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள வீதியின் இருமருங்கிலும் மெழுகுதிரி ஏந்தி நாங்களும் இருக்கின்றோம் உங்களுடன் என போராட்டத்திற்கு வலுச்சேர்த்தனர்.

கல்முனை பிராந்தியத்திலுள்ள மக்கள் தங்களின் போராட்டத்தை வெளிப்படுத்துமுகமாக ஒன்றுகூடி ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு அடிப்படை உரித்தை வென்றெடுக்க போராடுவதாகவும் போராட்டக்காரர்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பதாக கூறினர்.
அரசியற்கட்சியை சார்ந்த பிரமுகர்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவருவோரை சந்தித்துவருகின்றனர். இந்நிலையில் உண்ணாவிரதம் இருப்போரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்