யாழ். ஓட்டுமடம் ஃபிஸ்கால் ஒழுங்கை புனரமைப்பு – யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் நேரில் பார்வையிட்டார்.

ஊரெழுச்சி (கம்பரெலிய) திட்டத்தின் கீழ் நல்லூர் தொகுதியில் அடங்கியுள்ள யாழ்.மாநகரசபையின் 09ஆம் வட்டாரமான ஐயனார்கோவிலடி வட்டாரத்தில் உள்ளடங்கியுள்ள ஓட்டுமடம் ஃபிஸ்கால் ஒழுங்கையானது மக்கள் போக்குவரத்துச்செய்யமுடியாதவாறு சிதைவடைந்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது இவ்வீதியானது உயரமாக்கப்பட்டு தாரிடப்பட்டு முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகரசபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் 02ஆம் வட்டார உறுப்பினரும், மராமத்துக்குழுவின் உறுப்பினருமான ப.தர்சானந்திடம் மேற்படி ஒழுங்கை மக்கள் முன்வைத்த கோரிக்கையையடுத்து, மாநகரசபை உறுப்பினரின் தீவிர முயற்சியின் பேரில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் சிபார்சிலான ஊரெழுச்சி நிதியொதுக்கீட்டின் கீழ் இவ்வீதியானது முழுமையாகப்புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது.

இன்று 19.06.2019 புதன்கிழமை பி.ப 03.00 மணியளவில் இடம்பெற்ற இப்பணிகளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபையின் உறுப்பினர் ப.தர்சானந் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், ஒழுங்கை மக்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.

மிக நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாத ஒழுங்கையை புனரமைத்து வழங்கியமைக்காக மக்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கும் நன்றியினைத்தெரிவித்துக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்