சின்ன புதுக்குளம் மற்றும் வேப்பங்குளம் வங்கி ஊடாக மேலும் 4611 பயனாளிகளுக்கு சமுர்த்தி

வவுனியா சின்ன புதுக்குளம்  வங்கி மற்றும்  வேப்பங்குளம் வங்கி  ஊடாக 4611  பயனாளிகளுக்கு மாதாந்தம்    சமுர்த்தி பணம் பெறுவதர்கான    உரிமைப் பத்திரம்  வழங்கிவைக்கப்பட்டது

வங்கி  மட்டத்திலான  புதிய  சமுர்த்தி  பயனாளிகளுக்கான  உரிமைப் பத்திரம் வழங்கும்  நிகழ்வு  இன்று  வவுனியா  பிரதேசத்துக்குட்பட்ட சின்ன புதுக்குளம் மற்றும் வேப்பங்குளம் வங்கியில் இடம்பெற்றது

இந் நிகழ்வு வவுனியா பிரதேச செயலாளர் திரு க உதயராசா    தலைமையில் இடம்பெற்றது
நாடு பூராகவும் 6 லட்சம் புதிய சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட திட்டத்தின்கீழ் வவுனியா மாவட்டத்தில் 11 ஆயிரத்து 555 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்

வவுனியா சின்ன புதுக்குளம் வாங்கி ஊடாக 1956 நபர்களுக்கும் வேப்பங்குளம் வாங்கி ஊடாக 2675 நபர்களுக்கும்   புதிய சமுர்த்தி உரிமைப் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது

இந்நிகழ்வில் வவுனியா சமுர்த்திப்பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சன், அவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, அவர்களும் தலைமைப்பீடம் முகாமையாளர் திருமதி சந்திரகுமார் சர்வலோஜினி, அவர்களுடன் சிரேஷ்ட முகாமையாளர்களான  திரு வில்வராஜா மற்றும் திரு பாலசேகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்