கல்முனை போராட்டத்தை வலுப்படுத்த காரைதீவு, நாவிதன்வெளி, மட்டக்களப்பிலும் அடையாள உண்ணாவிரதம் !

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில் இடம்பெற்றுவரும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவில் உண்ணாவிரதம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.பூபாலரெத்தினம், இ.மோகன், ச.ஜெயராணி, த.மோகன், எம்.காண்டிபன் ஆகியோருடன் முன்னாள் காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு அமைப்பாளருமான பொறியலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் சில பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை மக்களுக்கான சேவைகளை சிறப்பாக வழங்கும் விதமாக சகல வசதிகளும் கொண்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்தி தர வேண்டும் என்ற கோஷத்துடன் கல்முனையில் பிரதான உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்று வரும் இந்நிலையில் அப்போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு காந்தி பூங்கா மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அருகிலும் அடையாள உண்ணாவிரதம் இடம்பெற்றுவருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்