அங்கஜன் எம்பியினால் போதை ஒழிப்பு வலுவாக்கும் செயற்பாடு யாழ் மாவட்டத்தில்

போதை ஒழிப்பு வாரம் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் தலைமையில் போதை ஒழிப்பு நிகழ்வுகள் இடம்பெற உள்ளது.

போதை ஒழிப்பிற்காக விசேடமாக கிராம மட்டத்தில் கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

இவ் விசேட குழுவில் அங்கத்துவம் பெற்று தேசிய செயற்திட்ட நடைமுறையில் ஒன்றிணைந்து சக்திமிக்க கிராமத்தை ஒன்றிணைப்போம். என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டங்களின் கருத்திட்ட ஒருங்கிணைப்பாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இவ் நிகழ்வில் துறை சார்ந்த அமைப்புக்கள் ,சிவில் அமைப்புக்கள், கிராம மட்ட அமைப்புக்கள், மற்றும் திணைக்கள துறைசார் அதிகாரிகள், பொலிசார் மற்றும் மக்கள் பங்களிப்புடன் போதை ஒழிப்பு செயற்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் தலைமையிலான மாநகர ,பிரதேச சபைகளினது உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் ஒன்றினைவுடன், பாடசாலைகள், கிராம மட்ட அமைப்புக்கள் ரீதியாக பல்வேறு செயற்திட்ட நடவடிக்கைகளுடன் வலுவான பிரயோக கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்