நள்ளிரவில் டயர் எரித்தவர்களை தேடும் பணிகள் முன்னெடுப்பு

கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் டயர் எரித்தவர்களை தேடும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

நற்பிட்டிமுனை சந்தி கிட்டங்கி வீதி உள்ளடங்களாக பொதுக்கட்டடங்கள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் கடைகளில் குறித்த சோதனை நடவடிக்கைகள் நேற்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.

கற்பிட்டிமுனை கிட்டங்கி வீதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு இனந்தெரியாத குழுவொன்று டயர்கள் மரக்கட்டைகளை வீதியின் குறுக்காக எரித்துவிட்டு தப்பிச் சென்றிருந்தது.

இதனால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன், அவசர அழைப்பின் பிரகாரம் அவ்விடத்திற்குச் சென்ற கல்முனை பொலிஸார் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இச்செயற்பாட்டை மேற்கொண்டவர்கள் பொதுப்போக்குவரத்தை குழப்பும் நோக்குடன் செயற்பட்டுள்ளதுடன், பொலிஸாரின் வருகையையடுத்து அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் தப்பியவர்களைத் தேடி இராணுவத்தினரும் பொலிஸாரும் சிசிரிவி காட்சிகளைக்கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடைபெற்ற இடம், சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள இடத்திலிருந்து 1 கிலோமீற்றர் தூரத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்