தலவாக்கலை சென்கிளயார் ஸ்டேலின் தோட்டத்தில் தொடர் குடியிருப்பில் திடீர் தீ 09 வீடுகள் முற்றாகசேதம்.06 குடும்பங்களை சேர்ந்த 26 பேர் நிர்கதி

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை செ;னகிளயார் ஸ்டேலின் தோட்டத்தில் ஐந்தாம் இலக்க தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று இன்று ( 19) திகதி பகல் 2.30 மணியளவில் திடீரென தீப் பற்றிக்கொண்டதில் அக்குடியிருப்பில் இருந்த 09 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீயினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படாத போதிலும் தொழிலாளர்களில் அத்தியவசிய ஆவனங்கள்,தங்க நகைகள்,தளபாடங்கள் உடுதுனிகள்,பாடசாலை மாணவர்களின் புத்தகங்கள் உட்பட அனைத்தும் முற்றாக தீகிரையாகியுள்ளன.

இந்த தீவிபத்து காரணமாக அந்த குடியிருப்பில் வசித்து வந்த 06 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 26 பேர் நிர்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் இவர்கள் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட  தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் விடுதில்; தற்காலிமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 13 பெண்கள் 13 அடங்குவதாகவும்;,ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் 01 ஒருவரும் ஒன்;பது சிறுவர்களும்  அடங்குவதாக கிராம சேவகர்  தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தோட்ட நிர்வாகத்தினாலும் இடர் முகாமைத்துவ நிலையத்தினாலும் சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளன.
இத் தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

குறித்த தீயினால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இத்தீவிபத்துக் காரணமாக பிரதேசத்தின் பல இடங்களுக்கு மின் சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகனை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இத குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரவிக்கையில்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்