அக்கரப்பத்தனை கிளாஸ்கோ மேல் பிரிவு தோட்ட வெளிகள அதிகாரியை இடம்மாற்றம் செய்யுமாறு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இத்தோட்டத்தில் 20 வருடகாலமாக வெளிகள உத்தியோகஸ்தர் காமனி என்பவரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு இத்தோட்டத்தை சேர்ந்த 100 பேர் நேற்று தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்திற்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களை குறித்த வெளிகள உத்தியோகஸ்தர் கடுமையாக வஞ்சிப்பதாகவும் கட்டாயம் 18 கிலோ கொழுந்து பறித்தால் மாத்திரம் முழு நாள் சம்பளம் கொடுக்கமுடியும்.
இல்லாவிட்டால் அரை நாள் சம்பளம் மாத்திரமே கொடுக்கமுடியும் என தெரிவிப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு தேயிலை மலைகள் புற்கல் வளர்ந்து காடாகவும் முறையான பராமரிப்பு இல்லையெனவும் தெரிவிக்கும் இவர்கள் தமக்கு தோட்ட நிர்வாகத்தால் வழங்கவேண்டிய சலுகைகள் வழங்குவதில்லை பிள்ளைகளுக்கு தேவையான  சுகாதார நடவடிக்கைகளும் வழங்குவதில்லை. என இவர்கள் குற்றஞ்;சுமத்துகின்றனர்.

தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளுவதற்கு தோட்ட அதிகாரியிடம் கலந்துரையாடல் நடத்துவதற்கு திகதி கோரினாலும் அதற்கு முறையான பதில் வழங்கப்படுவதில்லை.
தொழிலாளர்களுக்கு  மாதாந்தம் வழங்கப்படும் கோதுமை மா தேயிலை தூள் விடுமுறை என சலுகைகளை வழங்குவதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவிப்பதாகவும் தாங்கள் தொழில் செய்ததற்கான பெயர் அட்டையில் பதிவுசெய்து தருமாறு கேட்கின்ற போது அதனை வாங்கி முகத்தில் எரிவதாகவும் ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர்கள் வெளிப்படுத்தினாரகள்.

தங்களுடைய பிரச்சனை தொடர்பாக தாம் சந்தா பணம் செலுத்தும்  தொழிற்சங்க அதிகாரிகளிடம் முறையிட்டாலும் அவர்கள் தோட்ட அதிகாரிகள் பக்கமே பேசுவதாகவும் கஸ்டபட்டு உழைத்து கொடுத்த சந்தா பணத்திற்கு  கூட தொழிற்சங்கங்கள் ஒன்று செய்வதில்லை என தெரிவிக்கும் இவர்கள்
எனவே தோட்ட அதிகாரி மற்றும் வெளிகள உத்தியோகஸ்களை இடமாற்றம் செய்யும் வரை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படபோவதாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்