கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தால்! வெறிச்சோடி போயுள்ள தமிழ் பிரதேசங்கள்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி இன்றையதினம் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டு வருகிறது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற காரியாலயங்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் இந்த ஹர்த்தாலுக்கு முழு ஆதரவை வழங்கி வருகின்றன.
கிழக்கு மாகாணத்தின் பல தமிழ்ப் பிரதேசங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்