கள்ளப்பாடு, றோயல் முன்பள்ளியில் களைகட்டிய சிறார்களின் சந்தை

முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள றோயல் முன்பள்ளியில், சிறார்களுடைய சந்தை வைக்கும் நிகழ்வானது மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டார்.

மேலும் இந் நிகழ்வானது, 19.06.2019 முன்பள்ளியின் முதன்மை ஆசிரியரான, திருமதி.ரதிக்குமார் – நடேஜினி அவர்களின் தலைமையில், கள்ளப்பாடு பொது நோக்கு மண்டக வளாகத்தில் இடம்பெற்றது.

விருந்தினர் வரவேற்றபுடன் தொடங்கிய இந் நிகழ்வில், தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.

இவற்றினையடுத்து சிறார்களுடைய சந்தையில் வியாபாரமானது தொடங்கியது. சிறார்களுடைய சந்தையில், உள்ளூர் உற்பத்திப் பொருட்களான, நிலக்கடலை, பழவகைகள், பனங்கிழங்கு, தேங்காய்,மீன், இறால், குளிர்பானங்கள், மரக்கறிவகைகள், ஆடைகள் என்பன சந்தைப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த சிறார்களுடைய சந்தையைப் பார்வையிடுவதற்கென அதிகளவான மக்கள், கலந்துகொண்டதுடன், சிறார்களால் சந்தைப்படுத்தப்பட்ட பொருட்களையும் பெற்றுச்சென்றனர்.

மேலும் இந் நிகழ்வில் விருந்தினர்களாக, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன்அவர்கள், கந்தையா – சிவசுப்பிரமணியம் (முன்பள்ளிகளின் வலையக்கல்விப் பணிப்பாளர்), கிறிஸ்னகுமார் கமலினி (முன்பள்ளிகளின் இணைப்பாளர்), சந்திரசேகரம் அகிலன் (கள்ளப்பாடு வடக்கு, றோயல் முன்பள்ளி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டதுடன், இந் நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள், சிறார்களின் பெற்றோர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்