கல்முனை நோக்கி திரளும் மக்கள் : தீர்வை கொடுப்பதிற்கு அஞ்சும் அரசு

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் உரிய முறையில் தரமுயத்தி தரகோரி 4வது நாளாக தொடரும் உண்ணாவிரதப்போராட்டத்திகு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்,சிங்கள மக்கள் ஆதரவளித்துவருகின்றனர்.

இன்று காலை 8 மணியளவில் சேனைக்குடியிருப்பு கணேச மகாவித்தியாலயத்திற்கு அருகிலிருத்து கல்முனை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு பேரணியாக சிறுவர் முதல் பெரியோர் வரை சென்று தங்களது ஆதரவினை உண்ணாவிரதமிருக்கும் மதகுருமார், சக போராட்டக்காரர்களுக்கு வழங்கி போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவே இந்த அமைதி பேரணி இடபெற்றதாக தெரிவித்தனர்.

இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரம் நடைபவனியாக பதாதைகள் ஏந்தி தங்களது ஆதங்த்தை வெளிப்படுத்தினர்.

அம்பாறை ,மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் அடையாள தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக உண்ணாவிரதப்போராட்தில் ஈடுபட்டு தங்களது பூரண ஆதரவினை வழங்கிவருவதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்