கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அடிப்படைத்தகுதியுள்ள பணியிலிருக்கும் எங்களை  அந்த தகுதியே கோரப்படாத பதவியிலிருப்பவர்கள் தகுதியில்லை என கூறுவது நியாயமா எனவும் கேள்வி

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி  உதவி உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து கண்டன  ஆர்ப்பாட்டம்  ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இன்று 20-06-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக காலை பத்து மணிக்கு ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் பின்னர்  பேரணியாக மாவட்டச்  செயலகம் வரை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபருக்கான மகஜர் மேலதிக மாவட்ட அரச அதிபரிடம்  கையளிக்கப்பட்டது.
புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் பொது மக்கள் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தகுதியில்லாதவர்கள் என்று பேசியிருந்தனர். இதற்கு எதிராகவே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்  கௌரவ சிறிதரன், அவர்களே, கௌரவ விஜயகலா அவர்களே எங்கள் மீதான உங்கள் பொய்களை நிறுத்துங்கள் எங்கள் வேலைக்கு அடிப்படைத் தகுதியுண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தவிர, தகுதிகான காலத்தை பெற்றும்  தகுதியில்லை  என கூறுவது நியாயமா? கல்வி இராஜாங்க அமைச்சரே! பாராளுமன்ற உறுப்பினரே தகுதியில்லை என கூறுவதற்கு  என்ன ஆதாரம் உண்டு? மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள் தகுதியில்லை என்ற பொய்யுரைக்கு மன்னிப்புக் கேள்? கௌரவ சிறிதரன் அவர்களே, கௌரவ விஜயகலா அவர்களே  எங்கள் மீதான உங்கள் பொய்களை நிறுத்துங்கள், போதுமான தகுதியிருக்கும் எங்களிடம் தாங்கள் எதிர்பார்க்கும் தகுதி  என்ன? கை வைக்காதே கை வைக்காதே சமுர்த்தி படையணியில் கை வைக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி  உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே, அதன் பொருளாளர், சிளிநொச்சி சமுர்த்தி சங்கத்தின் தலைவர் ஆகியோர்  கருத்து தெரிவிக்கையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் நிறைவான தகுதியுடன் காணப்படுகின்றனர்.அவர்கள் அனைவரும் தகுதிகான் காலம் நிறைவுற்று அதற்கான உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் அவர்களை தகுதியில்லை என கூறுவதனை நாம் வன்மையாக கண்டிருக்கின்றோம்,  இந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா ஆகியோர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மீது தங்களின்  அரசியல் இருப்புக்கான பொய்யான கருத்துககைள கூறுவதனை நிறுத்த வேண்டும், அவர்களை ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும் இலங்கையில் உள்ள எல்லாத பதவிகளுக்கும் அடிப்படைத் தகுதியுண்டு அது நாட்டின் சட்டம். சாதாரண சிற்றூழியர்கள் கூட தரம் எட்டில் கல்வி கற்றிருக்க  வேண்டும் ஆனால் அரசியல்வாதிகளுக்கு மட்டும் எந்த அடிப்படைக் கல்வித் தகுதியும் கேட்கப்படுவதில்லை. இலங்கையில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் சாதாரண அடிப்படைத் கல்வித்தகுதியே இல்லாதவர்கள் எனத் தெரிவித்தார்கள்.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி  உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே, சங்கத்தின் பொருளாலாளர்  கிளிநொச்சி சமுர்த்தி சங்க தலைவர் சங்கர், மன்னார் சமுர்த்தி சங்கத்தின் செயலலாளர் கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்