இலங்கையர்களை திருப்பி அனுப்பியது குவைத்!

குவைத்திற்கு வீட்டுப் பணிப்பெண்களாக சென்றிருந்த பெண்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

54 பெண்கள் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை இவ்வாறு நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக இவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

குவைத்தில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய பெண்களே இவ்வாறு நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளவர்களில் 37 பேர், குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்குரிய பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்