உண்ணாவிரதப்போராட்ட காரர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி உண்ணாவிரதமிருந்து வருபவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

பொதுத்தொல்லை ஏற்படுத்தினார்கள் எனத் தெரிவித்தே அவர்களுக்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன், கல்முனை சிறிமுருகன் ஆலய சச்சிதானந்த குருக்கள், விகாராதிபதி ரன்முத்து கலசங்கரத்ன கிமியன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த அழகக்கோன் விஜெயரத்னம் ஆகிய நால்வருக்கே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்