கொழும்பு புறக்கோட்டையில் அசாதாரண சூழ்நிலை! கொந்தளிக்கும் மக்கள்

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திடீரென நாடு தழுவிய ரீதியில் ரயில்வே ஊழியர்கள் தொழில் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்து அஞ்சல் ரயில் சேவைகள் உள்ளிட்ட பல ரயில் சேவைகள் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கொழும்பு – புறக்கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் பெருமளவு மக்கள் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ரயில்வே தொழிற்சங்கம் ஒன்றியம் தீர்மானித்திருந்தது.

எனினும் திடீரென தற்சமயம் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால் இந்த ஏற்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்