அவசரகாலச் சட்டம் இனி ஒருபோதும் இல்லை: மஹிந்த

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறையென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலை தற்போது மாறி வழமைக்கு திரும்பியுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனாலும் பாடசாலைகள், தூதரகங்கள் மற்றும் முக்கிய அமைச்சுக்கள் உள்ளிட்டவைகள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதெனவும் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்