கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் 108 தேங்காய் உடைப்பு

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று (21.06.2019) காலை 7.30 மணியளவில் 108 தேங்காய் உடைக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியமும், வவுனியா மாவட்ட பொது அமைப்புகளும் இணைந்து கல்முனையில் இடம்பெறும் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த போராட்டத்தினை முன்னேடுத்தனர்.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அதன் பின்னர் ஆலய முன்றலில் 108 தேங்காய் உடைக்கப்பட்டது.

இதில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பௌத்த மதகுரு , அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் , வர்த்தகர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்