தற்கொலைத்தாரிகள் ஐ.எஸ் உறுப்பினர்கள்: உறுதிப்படுத்தியது ரஷ்யா

இலங்கையில் தொடர் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டவர்கள் சிரியா- ஈராக் ஆகிய நாடுகளில் முன்னர் தீவிரமாக செயற்பாட்டில் ஈடுபட்ட ஐ.எஸ் உறுப்பினர்கள் என ரஸ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரிகொகோவ் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் உவா நகரில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான சர்வதேச கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது யூரிகொகோவ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“சிரியா- ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பிற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு, இலங்கை திரும்பிய உள்ளுர் தீவிரவாத குழுவொன்றே குண்டுவெடிப்புகளை திட்டமிட்டது

மேலும் குறித்த அமைப்பு, வெளிநாடுகளிலுள்ள ஐ.எஸ் கட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டே தொடர் குண்டுத் தாக்குதலையும் நடத்தியுள்ளது.

இதேவேளை சிரியா- ஈராக்கிற்கு வருகை தருமாறு ஏனைய நாடுகளிலுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளை அவ்வமைப்பு அழைத்தது. ஆனால் தற்போது அவர் அவர் தங்கியிருக்கும் நாடுகளில் தாக்குதலை நடத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாடுகளினால் ஐரோப்பிய நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது” என யூரிகொகோவ் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்