அவசரகால விதிகள் ‘நியாயமான மற்றும்  விகிதாசாரத்தில்’ இருக்க வேண்டும்

அவசரகால விதிகள் ‘நியாயமான மற்றும்  விகிதாசாரத்தில்’ இருக்க வேண்டும்

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப் பட்ட அவசரகால விதிகளில் காணப்படும் ஏற்பாடுகளுக்கு எதிராக இரண்டு அடிப்படை உரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

16 யூன் , 2019

இரண்டு முக்கிய சிவில் சமூக ஏற்பாட்டாளர்கள்  சிறிலங்கா குடிமக்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி தற்போதுள்ள அவசரகால விதிகளின் பல பிரிவுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுச் செய்துள்ளார்கள்.

மாற்றுக் கொள்கைகளுக்கான  மையத்தின் (CPA) நிருவாக இயக்குநர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து  மற்றும் புறவெசி பலய (Purawesi Balaya) அமைப்பின் அழைப்பாளர் காமினி வியங்கொட ஆகியோர் அடிப்படை உரிமை மனுக்களை கடந்த  யூன் 10 திங்கட்கிழமை தாக்கல் செய்துள்ளார்கள்.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பிரசன்னா ஜெயவர்த்தன, முர்டு பெர்நாந்து மற்றும் எஸ். துரைராசா ஆகியவர்களைக் கொண்ட நீதியரசர்கள் குழுமுன்  எதிர்வரும்  யூலை 05  அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.  அரசியல் யாப்பின் உறுப்புரை 35 இன் கீழ் உத்தியோகத்தர் என்ற முறையில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். மனுதாரர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்தா கொட்டகொட அவர்களையும்  பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளார்கள்.

மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் தாக்கல் செய்துள்ள விண்ணப்பம்,  ஏப்ரில் 22, 2019  திங்கட்கிழமை  அன்று அரசிதழில் பிரசுரமான அவசரகால விதிகள் 4, 8(2), 10, 18, 19 மற்றும் 58 ஆகியவற்றை சவாலுக்கு உட்படுத்துகிறது.

விண்ணப்பதாரர்கள் அரசிதழில் காணப்பட்ட சிக்கலான விதிகளை எதிர்த்து மேன்முறையீடு  செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றும்  அந்த விதிகளை நடைமுறைப்படுத்துவதை தடுக்குமாறு  இடைக்கால  நிவாரணம் வழங்குமாறும் கேட்டுள்ளனர்.  அரசியல் யாப்பில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை  குறிப்பிட்ட விதிகள் மீறுகின்றன அல்லது உடனடியாக மீறுகின்றன என்பதால் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள் நாடுகின்றார்கள். 

அவசரகால நிலையை எதிர்த்து விண்ணப்பித்த  பிரபலமான சிவில் சமூக அமைப்பு தாம்  அரசிதழில் காணப்பட்ட அவசரகால நிலையை எதிர்க்கவில்லை என்றும் அதில் காணப்படும்  சில விதிகளை மட்டும் எதிர்ப்பதாகக் கூறியுள்ளது.

மாற்றுக் கொள்கைக்கான மையம் சவாலுக்கு உட்படுத்தும் விதி 58(1) மற்றும் விதி 58(2) ஆகியன “ஒரு துணை பொலீஸ்மா அதிபரது தரத்துக்குக் குறையாத  அல்லது  வேறு யாராவது ஒரு பொலீஸ் உத்தியோகத்தர் அல்லது  தனது சார்பாக அவரால் அனுமதி க்கப்பட்ட ஒருவர் இறந்த  ஏதாவதொரு  சடலத்தை  அடக்கம் செய்ய அல்லது தகனம் செய்யத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்க  அனுமதி வழங்குகிறது.”

விதி 58(2) நிர்ணயம் செய்கின்ற    அவசரகால விதிகள் ஒரு அதிகாரி அவசரகால விதிகளின் கீழ் ஒரு சடலத்தை அடக்கம் செய்ய அல்லது தகனம்  செய்வது தொடர்பான  ஏற்பாடுகளின்  போது  வேறு  விதிகளின் கீழ் எடுக்கப்படும் ஏற்பாடுகளையோ அல்லது எழுத்து மூல சட்டங்களுக்கோ அந்த அதிகாரி உடன்பட வேண்டிய தேவையில்லை.

அதிகாரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு  குற்றவியல் நடைமுறைத்  தொகுப்பின் பிரிவு 370 நீதித்துறை மேற்பார்வை செய்வதற்கு வழி வகுத்துள்ளது.  இறந்த உடலை ஒரு பொலீஸ் அலுவலர் கைப்பற்றி அதனைத்  னது உசிதம் போல இறந்த உடலை விசாரணையின்றிப்   புதைத்து விடுவது அல்லது தகனம் செய்துவிடுவது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க ஒரு பொலீஸ் அலுவலருக்கு மேலே கூறிய அதிகாரங்களை வழங்குவது சமமற்றதான நிலையை உருவாக்கும்.  இது சந்தேகத்துக்கு இடமான கொலைகளை, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மூடிமறைக்க வழிகோலும்.  அவசரகால விதிகளைமுறைகேடாக  நடைமுறைப்படுத்தவும் வழி சமைக்கும். இதனால் காவலில் வைத்திருப்போர் இறக்கவும் நேரிடும். இது அதிகாரிகளைத் தண்டனைகளில் இருந்து தப்ப இடம் கொடுத்துவிடும்.  அந்த அதிகாரிகள் சந்தேகத்துக்கு இடமான இறப்புக்கள் பற்றிய ஆவணங்களை அழிக்க அல்லது அதனை அடையாளம் காணாதவாறு சிதைக்க  வழி வகுக்கும் என விண்ணப்பதாரர்கள் கூறுகின்றார்கள். 

நாடு இப்போது முகம்கொடுக்கும்  பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள  சில அவசரகால நடவடிக்கைகள்  அவசியம் என்பதை ஒத்துக் கொள்ளும் அதே வேளை அப்படியான விதிகள் நியாமானதாகவும்  அவர்கள் அடைய முற்படும் வழிமுறைகளுக்கு விகிதாசாரமாகவும் இருக்க வேண்டும். சிறப்பாக  நாட்டின் குடிமக்களது அடிப்படை உரிமைகளை குறைப்பதன் விளைவை அவர்கள் கொண்டிருக்கும்போது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் சார்பில் எம்.ஏ. சுமந்திரன் சனாதிபதி சட்டத்தரணி,  சட்டத்தரணிகள் விரான் கொறியா, பவானி பொன்சேகா, கையத்தி விக்கிரமநாயக்க மற்றும் இன்ஷிரா ஃபாலிக்  தோன்றினார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்