யோகிபாபுவுடன் காதலா? ’புஷ்பா’ ரேஷ்மா கூறிய வித்தியாசமான விளக்கம்

வேலைனு வந்துட்டா வெள்ளைகாரன் படத்தின் புஷ்பா என்ற கேரக்டரின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இப்படம் தவிர்த்து வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

மேலும், திருமணமாகாத இவரை பற்றிய கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் தான் உள்ளன. அதில் முக்கியமான யோகிபாபுவுடன் காதல் என்ற கிசுகிசுவை பற்றி ரேஷ்மா கூறுகையில், இதுபற்றிய நிறைய மீம்களை நானும் பார்த்தேன்.

நிறைய பேர் எனக்கு அதை அனுப்பி வைத்தனர். இது சோஷியல் மீடியாவில் வைரலானதால் அதற்கு மறுப்பு அப்போதே தெரிவித்த்ருந்தேன். இதனால் யோகிபாபுவுடன் அடுத்து நடிக்கலாம் என தோன்றியது, அதற்குரிய சான்ஸும் ஒன்று வந்துள்ளது. கூடிய விரைவில் இணைந்து நடிக்கலாம் என்றார்.

மேலும், இது இப்போதைக்கு கிசுகிசு, எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என மெல்லிய சிரிப்புடன் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்