ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு: சேவையில் மேலதிக அரச பேருந்துக்கள்

ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் காலங்களில் பயணிகளுக்கு தேவையான போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு மேலதிக அரச பேருந்துக்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களிலிருந்த பயணிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியமையினால் பதற்றமான சூழ்நிலை அப்பகுதிகளில் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே போக்குவரத்து சபை இத்தகையதொரு அறிவிப்பை விடுத்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்த போதும், அதனடிப்படையில் நிதியமைச்சு செயற்படாமையை கண்டித்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்