நடிகர்கள் சிபிராஜ்- விக்ரம் பிரபுவிற்கு இடையே இருந்த தலைப்பு இழுபறி! கடைசியில் ஜெய்தது யார்

சத்யராஜ் வால்டர் வெற்றிவேல் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அவர் மகன் சிபிராஜ் நடிக்கும் படத்திற்கு வால்டர் என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் வால்டர் என்ற தலைப்பும், கதையும் என்னிடம் உள்ளது. அதை நான் விக்ரம் பிரபு, அர்ஜூன் வைத்து தயாரிக்க இருக்கிறேன் என்று விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான சிங்காரவேலன் கூறி நீதிமன்ற நோட்டீசும் அனுப்பினார்.

இந்நிலையில் தற்போது இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்து அது சுமுகமாக முடிந்துள்ளது. படத்தின் தலைப்பை சிபிராஜுக்கு விட்டு தருவதாக சிங்காரவேலன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் கொடுத்து விட்டார்.

இது தொடர்பாக வால்டர் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் கூறுகையில், சிபிராஜின் தந்தை சத்யராஜின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் முக்கியத்துவம் காரணமாக இந்த படத்துக்கு வால்டர் என்று பெயரிட விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக, தலைப்பு தொடர்பான சில சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில் எல்லாம் முடிந்து தலைப்பு எங்கள் வசமானது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது படப்பிடிப்பு கும்பகோணத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்