காவியுடை தரித்தவர் எல்லாம் இன்று ஐ.ஜி.பி.க்களாகி விட்டனர் – அமீர் அலி

காவியுடை தரித்தவர் எல்லாம் இன்று ஐ.ஜி.பி.க்களாகி விட்டனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘காவியுடை தரித்தவர் எல்லாம் இன்று ஐ.ஜி.பி.க்களாகி விட்டனர். இவர்கள்தான் இன்று அமைச்சர்களை பதவி நீக்குவது, வீட்டுக்கு அனுப்புவது, பிரதேச சபைகளைப் பிரித்துக்கொடுப்பது போன்ற வேலைகளை செய்கின்றனர்.

கல்முனை பிரதேச செயலகம் விவகாரத்தை சுமுகமாக தீர்த்துக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆனால் வியாழேந்திரன், கருணா அம்மான் போன்றவர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு எம்.ஜி.ஆர்.,சிவாஜிகளாகி விட்டனர்.

அதேவேளை மட்டக்களைப்பு தமிழ் சமூகம் செய்த மிகப்பெரிய அநியாயம் வியாழேந்திரனை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தது. படித்தவர்களை தெரிவு செய்யுமாறு கேட்டபோது படிப்பித்தவர்களை தெரிவுசெய்து விட்டனர்’ என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்