இலங்கையை பின்னிலைப்படுத்தியது அமெரிக்கா

ஆட்கடத்தல் விவகாரத்தில் இலங்கையை அமெரிக்கா தமது வருடாந்த அறிக்கையில் பின்னிலைப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆட்கடத்தல் விடயத்தில் இரண்டாம் அடுக்கு கண்காணிப்பு பட்டியலில் இலங்கை காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளாத போதிலும் முற்பட்ட வருடத்தினை விட தற்போது சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ஆட்கடத்தல் விவகாரத்தில் மேலதிக செயற்பாடுகளை இன்னும் அதிகரிக்க வேண்டுமெனவும் அத்திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்