உண்ணாவிரத போராட்டக்காரர்களை சீண்டும் விதமான பேரணிக்கு முஸ்லிம்கள் முஸ்தீபு – கல்முனையில் உச்சகட்ட பதற்றம்!

கல்முனை பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சீண்டும் விதமாக, அவர்களின் போராட்ட இடத்திற்கு முன்பாக முஸ்லிம் மக்களை திரட்டி பேரணியொன்றை நடத்த நடக்கும் ஏற்பாட்டால் கல்முனையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கல்முனை எம்.பி, ஹரீஷின் ஏற்பாட்டில் நடக்கவுள்ள இந்த பேரணி ஏற்பாடுகளையடுத்து, அங்கு இராணுவம், அதிரடிப்படை, பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர், வெளியிடங்களிலிருந்து வாகனங்களில் அழைத்து வரப்படுபவர்களையும் இணைத்து சில ஆயிரக்கணக்கானவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் நடந்து வருகிறது.

தமிழ் மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடக்குமிடத்திற்கு முன்பாக இந்த பேரணி செல்லவுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்