கருணை கொலையாவது செய்யுங்கள்!- இலங்கை தமிழர்கள் திருச்சி சிறையில் உண்ணாவிரத போராட்டம்

எங்களை கருணை கொலையாவது செய்யுங்கள் என வலியுறுத்தி திருச்சி மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் நான்கு பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை தமிழர்களான பாஸ்கரன், ரமேஷ், அருளின்பதேவன் மற்றும் செல்வம் ஆகியோரே இவ்வாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கைதிகள் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் எந்ததொரு குற்றங்களும் புரியவில்லை. ஆகையால் உடனடியாக தங்களது வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி விடுதலை செய்ய வேண்டும்.

இல்லாவிடின், கருணை கொலையாவது தங்களை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்