ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை வெளியிட்டார் தலதா அதுகோரல

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவே நியமிக்கப்படுவாரென நீதியமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

கடுறோதகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தலதா அதுகோரல இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நல்லாட்சி உருவாக்கப்பட்டது.

மேலும், இதற்கு முன்னைய ஆட்சியில் தனியார் நிலங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் பொதுமக்களின் காணிகளும் அபகரிக்கப்பட்டது. இவ்விடயங்களை அனைத்து மக்களும் நன்கு அறிவார்கள்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவே நிறுத்தப்படுவார். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை” என  தலதா அதுகோரல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில், சபாநாயகர் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவின் பெயரை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்