உண்ணாவிரதிகளின் உடல்நிலை பாதிப்பு – குவியும் மக்கள்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தலை கோரி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்வர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருமாறு வைத்தியர்கள் அழைத்தும் மறுத்துள்ள உண்ணாவிரதிகள் தீர்வு உறுதியான திருப்தியான உத்தரவாதம் வருவரை போராடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

சர்வமத குருக்களும் ,பொது மக்களும், பொது அமைப்புக்களும், கட்சிபேதமின்றி அரசியல் தலைவர்களும், ஆதரவை வழங்கிவருகின்றனர் மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு.

இதே வேளை உத்தரவாதங்களை வழங்க சில அமைச்சர்கள் இன்று கல்முனையை வந்தடைவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்