நீ அறிவாயா?…

உயிரில் உன்னை
வைத்தே நாளும்
தினம் தினம் நானும்
கனவினில் மிதந்தேன்!.

இறுதியாய் இன்று
உன்னைவிட்டே
நானும் போகிறேன்….!.
இதயத்தின் வலியினை
நீ அறிவாயா?..

வாழ்வில் உனையே
நம்பியதுண்மை
உண்மை என்பது
உன்னிடமில்லை
சுயநலம் உன்னில்
தலைவிரித்தாட்டம்!.

மகிழ்வை தந்து
தவிக்க விட்டாய்
உறவாய் நீயென
கண்டது கனவே!.

நித்தம் உன்னால்
சித்தம் தொலைத்தேன்
சத்தம் இன்றி
தினம் அழுகின்றேன்!.

ஒன்றை மறைக்க
போடும்வேசம்
முழவதும் அறிந்ததால்
வாழ்வே நாசம்!.

போலி வேசம்
போட்டே நாளும்
சுயநலவாழ்க்கை
வாழ்வது முறையா?..

விலையில்லா அன்பால்
விளைந்தது வினையே
உண்மையில்லா நீ
என் வாழ்விலெதற்கு?..

உன்னை விட்டே
இன்றகல்கின்றேன்!.
மண்ணைத் தொட்டே
என்னுயிர் துறப்பேன்!.

இன்னொரு பிறவி
புவியினில் வேண்டாம்
இந்த பிறவியே
போதும் எனக்கு
மானுட வாழ்க்கை
தீயினில் தினமே!.

-கௌரிதாசன் மோகனா.-

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்