ஜனாதிபதியின் கம்போடிய விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கம்போடிய விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம், கம்போடியாவுக்கும் லாவோஸுக்கும் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார்.

எனினும், அவரது குறித்த பயணம் தற்போது பிற்போடப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதமே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதியின் குறித்த பயணம் பிற்போடப்பட்டமைக்கான காரணம் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்