புகையிரத தொழிற்சங்க வேலை நிறுத்தம் காரணமாக வவுனியாவில் பயணிகள் பாதிப்பு

இலங்கை புகையிரதநிலைய சாரதிகள் தொழிற்சங்கம் மேற்கொண்டு வரும்  பணிப்புறக்கணிப்பு காரணமாக வவுனியாவில் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வவுனியா புகையிரத நிலையம் மூடப்பட்டு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

புகையிரத நிலையத்திற்குச் சென்ற பயணிகள் புகையிரத சாரதிகளின் வேலை நிறுத்தம் காரணமாக திரும்பிச் செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

புகையிரத சாரதிகள் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக  புகையிரதமோன்று வவுனியா புகையிரத நிலையில் தரித்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்