பிரதமரின் செய்தியோடு கல்முனை விரையும் ,சுமந்திரன் ,மனோ, தயா கமகே – பரபரப்பாகும் கல்முனை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியோடு அமைச்சர்களான மனோகணேசன், தயாகமகே, மற்றும் சுமந்திரன் ஆகியோர் தற்போது கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகத் தகவல்.

அம்பாரை , கல்முனை வடக்குத் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை ,மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் அடையாள தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக உண்ணாவிரதப்போராட்தில் ஈடுபட்டு தங்களது பூரண ஆதரவினை வழங்கிவருவதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியோடு அமைச்சர்களான மனோகணேசன், தயாகமகே, மற்றும் சுமந்திரன் ஆகியோர் த்ற்போது கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் குறித்த போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்முனை முஸ்லிம் சமுகத்தினர் பாரிய ஆற்பாட்டம் ஒன்றுக்கு தயாராகி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவர்கள் தெரிவிக்கின்றன

அம்பாரை,கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி நடைபெறும் உண்ணாவிரத்தப் போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல்வேறு அரசியல்வாதிகளும் அங்கு முகாமிட்டுள்ளதுடன் அதிகளவான பொதுமக்களும் போராட்டக்களத்தில் குவிந்து வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்