வவுனியாவில் குளங்களை நோக்கிப் படையெடுக்கும் கொக்குகள்

வவுனியாவில் குளங்களை நோக்கி கொக்குகள் படையெடுத்து வருகின்றன.

வவுனியாவில் வரட்சியான காலநிலை நீடிப்பதால் குளங்கள் மற்றும் நீர் நிலைகளின் நீர்மட்டம் வற்றியுள்ளது. இதன்காரணமாக குளங்களில் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உயிருக்காக போராடுவதுடன் இறந்தும் வருகின்றன.

அவற்றை உணவாக பெற்றுக் கொள்வதற்காக கொக்குகள் இரைதேடி குளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால் குளப்பகுதிகள் கொக்குளால் நிறைந்துள்ளதுடன் அவை அழகான காட்சியாகவும் காணப்படுகின்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்