சட்டவிரோதமாக அமையப்பட்ட நடைபாதை நகரசபையினரால் அகற்றம்

வுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்பட்ட சட்டவிரோத நடைபாதை இன்று (21.06.2019) காலை 10.00 மணியளவில் வவுனியா நகரசபையினரால் அகற்றப்பட்டது.

வவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்படும் வர்த்தக நிலையத்திற்கு (சட்டவிரோத கட்டிடம்) முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா நகரசபையின் அனுமதியின்றி  கொங்கிறீட் மூலம் அமைக்கப்பட்ட நடைபாதையினை நகரசபை ஊழியர்கள் இன்று அகற்றியுள்ளனர்.

பொதுமகனோருவர் வவுனியா நகரசபைக்கு மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்தே இவ் கொங்கிறீட் நடைபாதை அகற்றப்பட்டது.

இவ் விடயம் தொடர்பாக குறித்த வர்த்தக நிலையத்தில் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,

வீதிக்கு அருகே குப்பைகளாக காணப்பட்டது. அதனையடுத்தே நான் இவ்விடத்தில் கொங்கீறிட் மூலம் நடைபாதை அமைத்தேன். நான் இது தொடர்பாக நகரசபையில் கதைத்துக்கொண்டிருந்த சமயத்தில் நகரசபையினரால் இப் நடைபாதை அகற்றப்பட்டுள்ளது. நான் நகரசபையில் அனுமதி எடுக்காது இதனை முன்னேடுத்தது என் தவறு தான் என தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்