வவுனியாவில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு – அமைச்சர் மாரப்பன அதிகாரிகளுடன் சந்திப்பு!!

வவுனியாவில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று (21.06.2019) மதியம் நடைபெற்றது.

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் அருவித்தோட்டத்தில் இராணுவம் கையப்படுத்தியுள்ள 123 ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பில் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இராணுவத்தின் வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, பொலிஸ் அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், வவுனியா மாவட்டச் செயலர், வவுனியாவின் நான்கு பிரதேச செயலாளர்கள், வன வளத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் வட மாகாண காணி ஆணையாளர் உட்பட நில அளவைத்திணைக்கள அதிகாரிகளும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்