பலர் போஷாக்கின்மை தொடர்பான நிபுணர்களாக மாறியுள்ளனர்: சஜித்

போஷாக்கு இன்மை தொடர்பாக தற்போது பலர் மேடைகளில் விசேட நிபுணர்களை போல் பேசி வருவதாகவும் இவர்களே காலஞ்சென்ற தனது தந்தை ரணசிங்க பிரேமதாச பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய மதிய நேர உணவு முத்திரையை இரத்துச் செய்தனர் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, வெதிவெவ பிரதேசத்தில் நிர்மாணிக்ப்பட்டுள்ள சஹஸ்ராவகம கிராமத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச நாட்டின் பாடசாலை மாணவர்களின் போஷாக்கு குறைவாக இருப்பதை அறிந்து இலவச மதிய நேர உணவு முத்திரையை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார்.

எதிர்காலத்தில் நாட்டு மக்கள் எடுக்கும் தீர்மானம் சஜித் பிரேமதாச என்றால், 44 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கு நிறைந்த ஒரு வேளை உணவை வழங்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வேன்.

பாடசாலை மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்குவது போல் போஷாக்கு நிறைந்த உணவை வழங்குவது அரசாங்கத்தின் கடமை. அது பாடசாலை மாணவர்களின் மனித உரிமை எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்