சாதகமான தீர்வு கிடைக்காவிடின் – கட்சியில் நீடிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் – கோடீஸ்வரன் எம்.பி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தகவல்களை தெரிவிக்க கல்முனை சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட்ட சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் செய்தியை தாங்கி கற்பிட்டிமுனை சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன், தயாகமகே ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் போராட்ட களத்தை சென்றடைந்தனர்.

இதன்போது, பிரதமரின் செய்தியினை சுமந்திரன் வாசித்துக் காட்டியதாகவும், இதன்போது, சுமூகமாக இருந்த நிலை அமைச்சர் தயாகமகே பேசியதன் பின்னர் முறுகல் நிலையடைந்ததாகவும், இதனையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் கால அவகாசம் கோரும் கடித்தினை செயற்பாட்டாளர்களிடம் கையளிக்குமுகமாக அமைந்திருந்த இந்தவிஜயத்தில் த.தே.கூ பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மூலம் கால அவகாசம் தொடர்பான செய்தி உண்ணாவிரதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, 30 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களாலும் மற்றும் த.தே.கூட்டமைப்பினாலும் தாம் ஏமாற்றப்பட்டுவந்துள்ளதாகவும், இனி கால அவகாசம் என்பதற்கிடமில்லையென்றும், இதனை செயற்படுத்துவதற்குரிய பல சந்தர்ப்பங்களை த.தே.கூ தவறவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி தங்களது அதிர்ப்தியை தெரிவித்த மக்கள் சுமந்திரனது உரைக்கு இடையூறை ஏற்படுத்தினர்.

அமைச்சர் மனோகணேசன் இந்த பிரதேச செயலகத்திற்கான நிதி மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவை தான் எதிர்வரும் கிழமைக்குள் பெறுவதற்கு ஆவனசெய்வதாக குறிப்பிட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எதிர்வரும் வாரத்தில் நிதி மற்றும் காணி அதிகாரம் தொடர்பில் சாதகமான தீர்வு எட்டப்படவில்லையாயின் கட்சியில் நீடிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவேண்டியேற்படுமென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்