கல்முனையில் என்னை எவரும் தாக்கவில்லை – அமைச்சர் மனோ கணேசன்

கல்முனையில் என்னை எவரும் தாக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தனது முக நூல் பக்கத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.

அவர் தனது முக நூலில் வெளியிட்ட கருத்து -;

தங்கள் மனதில் உள்ள ஒளிந்துள்ள என் மீதான குரோதங்களை வெளிப்படுத்த சில ஊடகங்கள் முயல்கின்றன.

சில சமூக ஊடகர்களும் முயல்கிறார்கள். கல்முனையில் போராடும் தமிழ் மக்கள் ஆத்திரப்பட்டது உண்மை. ஆனால், அந்த ஆத்திரம் எனக்கு எதிரானது அல்ல. என்னை எவரும் தாக்கவும் இல்லை. தூற்றவும் இல்லை.

என்னுடன் வந்த சுமந்திரன் எம்பி, தயா கமகே அமைச்சர் ஆகியோர் உண்ணாவிரத களத்திலிருந்து, வெளியேறும் வரை காத்திருந்து, பின்னர் என் வாகனத்தில் ஏறி மக்களிடம் கையசைத்து விடை பெற்றே நான் வந்தேன்.

இந்த உண்மை அங்கே அப்போது இருந்த எல்லா தமிழ் இளைஞர்களுக்கும் தெரியும் என தனது முக நூல் பக்கத்தில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்