இந்த வாரத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்திற்கு சாதகமன தீர்வு கிடைக்காவிட்டால் கட்சியையும் பார்க்க மாட்டேன் நான்  பதவிவகிப்பது தொடர்பில்  நான் மீள்பரிசீலனை செய்வேன் என மக்கள் முன்னிலையில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தின் போது இன்று பிரதமரினால் வழங்கப்பட்ட தீர்வினை போராட்டக்காரர்கள் எற்றுக் கொள்ளாதனையடுத்தே பாராளுமன்ற உறுப்பினர் தனது நிலைப்பாட்டை மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.